Vi ரூ.409 மற்றும் ரூ.475 ரீச்சார்ஜ் திட்டம் மாற்றப்பட்டுள்ளது நன்மைகளோ பல

எழுதியது Sakunthala | வெளியிடப்பட்டது 15 Jul 2022
HIGHLIGHTS
  • வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது

  • ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது.

  • 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது

Vi ரூ.409 மற்றும் ரூ.475 ரீச்சார்ஜ் திட்டம் மாற்றப்பட்டுள்ளது நன்மைகளோ பல
Vi ரூ.409 மற்றும் ரூ.475 ரீச்சார்ஜ் திட்டம் மாற்றப்பட்டுள்ளது நன்மைகளோ பல

இந்தியாவில் உள்ள முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் ஐடியா, தற்போது அதன் பயனர்களுக்காக தங்களின் ரீசார்ஜ் பேக்குகளை கூடுதல் சலுகையுடன் புதுப்பித்து உள்ளது. ரூ. 500-க்கு கீழ் உள்ள ஒரு மாத வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 மற்றும் ரூ.475 ஆகிய இரு பேக்குகள் தான் தற்போது கூடுதல் சலுகைகளுடன் புதுப்பிக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் ரூ.475 பேக்கில் 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது 4 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. மற்றபடி ஏற்கனவே இருந்தபடி வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர், இலவச காலிங், மெசேஜ் போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்று உள்ளன.

அதன்படி 28 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடிய ரூ.409 பேக்கில் இதுவரை ஒரு நாளைக்கு 2.5ஜிபி இலவச டேட்டா வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதனை 3.5ஜிபி டேட்டாவாக அதிகரித்துள்ளனர். மற்றபடி ஏற்கனவே இருந்தது போலவே இலவச வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ், போன்ற சலுகைகளும் இதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: Sakunthala has been working at digit since 2017 Read More

Web Title: Vi Rs 409 and Rs 475 recharge plans revised; offers more data than before
Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

LATEST ARTICLES அனைத்தையும் பாருங்கள்

Advertisements
DMCA.com Protection Status